தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று மக்கள் அனைவரும் காத்திருந்தனர்.
இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆதார் இன் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகை கடன் (5 சவரனுக்கு மேல்) பெற்றுள்ள நபர் மற்றும் அவரது குடும்பத்தினர், எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது.