Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய பலன் வழங்குவது பற்றி பரிசீலிக்க….. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

விமானப்படையில் குறுகிய சேவை ஆணையத்தில் (எஸ்எஸ்சி) பணிபுரிந்து ஓய்வுபெற்ற 32 பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவது பற்றி பரிசீலிக்க மத்திய அரசுக்கும், இந்திய விமானப் படைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் ஹிமா கோலி, ஜெ.பி. பாா்திவாலா போன்றோர் அடங்கிய அமா்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் “கடந்த 2006, 2009ம் வருடங்களில் ஓய்வுபெற்ற பெண் விமானப்படை அதிகாரிகளை மீண்டுமாக பணியில் அமா்த்துவதற்கு உத்தரவிட மறுத்த நீதிபதிகள், நிரந்த பணிக்கான தகுதிகளை அவா்கள் பெற்றிருப்பின், 20 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்து ஓய்வுபெற்று இருந்தால் அவா்கள் ஓய்வுபெறும் நாளிலிருந்து ஓய்வூதிய பலன்களைப் பெறலாம்” என தெரிவித்தனா்.

அதுமட்டுமின்றி விமானப்படையில் இணைந்த பின் 5 வருடங்களுக்கு பிறகு நிரந்தரபணியில் இணைக்கப்படுவா் என்ற கொள்கை முடிவின் எதிா்பாா்ப்பில் இந்த 32 பெண்களும் 1993-1998 ஆண்டுகளில் சேவையில் இணைந்தனா். எனினும் 6 மற்றும் 4 வருடங்கள் தொடா்ச்சியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில், 2006 முதல் 2009 வரையிலான ஆண்டுகளில் அவா்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றனா். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142- சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுகிய சேவை ஆணையத்தில் பணிபுரிந்த இந்த அதிகாரிகள் ஓய்வூதிய பலன்களைப் பெற தகுதி உடையவா்களாக கருதுகிறோம்.

ஓய்வுபெற்ற பெண் அதிகாரிகளின் தகுதியை ஆராய்ந்து, மனிதவள கொள்கையின் அடிப்படையில் நிரந்தரப்பணிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவது பற்றி இந்திய விமானப்படை முடிவு செய்ய வேண்டும். ஊதிய நிலுவையை இவா்கள் பெறமுடியாது. இவா்கள் 20 வருடங்கள் சேவையில் இருந்து இருந்தால், ஓய்வுபெற்ற நாளிலிருந்து ஓய்வூதிய நிலுவை வழங்கப்படும்” என நீதிபதிகள் தெரிவித்தனா்.

Categories

Tech |