Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்களுக்கு பவர் கிடையாது…! ரூல்ஸ் பேசிய தமிழக பாஜக…. வாயடைத்து போன எதிர்க்கட்சிகள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன்,  வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட வேண்டும், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட முடியாது. ரூல்ஸ் அதுபோன்று கிடையாது. டெல்லி தேர்தல் ஆணையம் தான் நவம்பரில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள், அதை வைத்துதான், இப்போ கார்ப்பரேஷனில் சட்டசபை படி கொடுப்பார்கள்.

இவர்கள் வந்து வட்ட வாரியாக பிரித்து கொடுப்பார்கள், இவர்கள் யாருக்கும் அந்த பவர் கிடையாது. வாக்காளர் பட்டியல் அதை வைத்துதான் 200 வார்டுகளில் பிரிக்கிறார்கள். சென்னை மாநகராட்சி ஆணையர் எம்பி, எம்எல்ஏவுக்கு 16 சட்டசபைக்கு இன்சார்ஜ் கொடுத்து விடுவார்கள். ஆனால் கார்ப்பரேஷன் எலக்சன் வரும்போது அவர்கள் 22 சட்டசபைக்கு வந்துருவார். அதனால் அவருடைய பொறுப்பு அதிகமாக வருகிறது. அதனால் ஒரு வேற்றுமை வருகிறது.

காஞ்சிபுரம் காலெக்டரிடம் இருந்து சோளிங்கர் வாங்க வேண்டும், செங்கல்பட்டிற்கு…. அதற்குப்பின் காஞ்சிபுரத்திலிருந்து ஆலந்தூர் வாக்காளர் பட்டியலை வாங்கவேண்டும், திருவள்ளூர் காலெக்டரிடம் இருந்து மதுரவாயல், அம்பத்தூர், திருவெற்றூர், மாதவரம் இந்த மாதிரி இடத்தில் வாங்கி தான் இவர்கள் 200 டிவிசன்  இங்கே இருக்கிற வருவாய் அலுவலருக்கு பிரித்துக் கொடுப்பார்கள். ஏற்கனவே 37 அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |