Categories
சினிமா

இவர்களுக்கு பாதுகாப்பும் மரியாதையும் கொடுப்பது மிகவும் அவசியமானது…. சஞ்சிதா ரெட்டி அதிரடி பேச்சு…..!!!!

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் யோகி பாபு ‘ஷூ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, கேவி பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் ப்ரொடக்ஷன் நிறுவனங்கள் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் டி.மதுராஜ் தயாரித்து உள்ளனர். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரில்லர் காமெடி பயணமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திரை பிரபலங்கள், பட குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறியது, படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும் இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

அதாவது, குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் மரியாதை கொடுப்பது மிக அவசியமான ஒன்று. இந்த பட வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடிகை கோமல் ஷர்மா கூறியது, இது போன்ற கதை உருவாக்கி அது திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம். இந்த படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக கருத்துக்கள் கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாணம் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்டு திரைப்படமாக உருவாகிய இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்று நன்றி தெரிவித்தார்.

Categories

Tech |