Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது…. ஜேர்மன் நோக்கி படையெடுக்கும் ரஷியர்கள்…. எதிர்ப்பு தெரிவிக்கும் உக்ரைன் அகதிகள்….!!!!!

ரஷியாவில் இருந்து வெளியேறி வருபவர்களுக்கு ஜேர்மனியில் புகலிடம் அளிக்கக்கூடாது என உக்ரைன்  அகதிகள் கூறி வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷியா 6  மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் ஜேர்மனி நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் ரஷிய  அதிபர் புதின்  இளைஞர்கள் அனைவரும்  போரில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனால் அச்சமடைந்துள்ள ஏராளமானோர்  அகதிகளாக ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அப்படி போர் செய்ய விரும்பாத ரஷியர்களுக்கு புகலிடம் அளிக்க ஜேர்மனியில் உள்ள பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து ஜேர்மன் நிதித்துறை அமைச்சர் marco Buschmann கூறியதாவது. புதினுடைய கொள்கைகளை வெறுத்து ஜேர்மனிக்கு வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம் எனக் கூறியிருந்தார். ஆனால் உக்கிரேனிலிருந்து அகதிகளாக வந்திருக்கும் அகதிகள் ஜேர்மனியில் ரஷியர்களுக்கு புகலிடம் கொடுக்கக் கூடாது என கூறி வருகின்றனர்.

Categories

Tech |