Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இவர்களுக்கு மட்டும் எளிதான வேலை வழங்க வேண்டும்”….. மாவட்ட கலெக்டர் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அறங்கில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவிட்டார். அப்போது பேசிய அவர், “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வேலை வழங்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் எளிதான வேலைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.  இந்த முகாமில் ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |