Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல்…! செல்போன் செயலி அறிமுகம்…. எதற்காக தெரியுமா…??

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை கண்காணிக்க செல்போன் செயலியை பொது சுகாதாரத்துறை அறிமுக செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் கடந்த 1985 முதல் ஒருங்கிணைந்து தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக வருடந்தோறும் பல லட்சம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதை கண்காணிப்பதற்காக பிரத்யேக செல்போன் செயலியை பொது சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்ட தகவல்கள் மட்டுமல்லாமல், விடுபட்டவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி திட்டத்தில் பங்கெடுக்கும் அலுவலர்கள் இந்த செயலியை கையாளுவது குறித்து பயிற்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வழக்கமான தடுப்பூசிகள், கொரோனா தடுப்பூசிகள், ‘மிஷன் இந்திரதனுஷ்’ திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த இயலும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |