தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும். இந்நிலையில் தொலைதூரக்கல்வி திறந்தவெளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.