Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு அதிகமா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது…. ராஜஸ்தான் முதல் மந்திரி குற்றச்சாட்டு….!!!!

காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைவிட அமலாக்கத்துறைக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது, அமலாக்கத்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அளவுக்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சுப்ரீம்கோர்ட் அமலாக்கதுறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமலாக்கத் துறை கைது செய்வதற்கு முன்பு விளக்கம்கூட அளிக்க தேவையில்லை. அதாவது யாரை வேண்டுமானாலும் கைது செய்து கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. நாட்டில் ஒரேமதம் என்பதை நோக்கிய அரசியல் போக்கு நிலவுகிறது. நமது தேசம் இதற்கு முன்பு இப்படி ஒரு அரசியலை பார்த்ததில்லை.

தற்போது இதை பார்த்து  மக்கள் கவலையடைந்து இருக்கின்றனர். எனினும் அதனை எதிர்த்து பேசுவதற்கு அச்சம் அடைந்துள்ளனர். அமலாக்கத்துறையின் விசாரணை எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது பாயலாம் என அச்சப்படுகின்றனர். அண்மை காலங்களில் எதிர்க் கட்சிகளை சேர்ந்த பலர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர் இவ்வாறு பேசினார். ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தையல் கன்னையாலால் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அப்போதுதான் பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்தும், அந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அமைதி காக்கும்படி பொதுமக்களிடம் பிரதமர் கேட்டுக்கொள்ளவில்லை என்று குற்றமசாட்டினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது, உதைப்பூர் படுகொலை சம்பவத்திற்கு பிறகு உடனே அதில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இல்லையெனில் மாநிலம் முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டிருக்கும். நான் அதனை தடுத்தேன். பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மக்களிடம் அமைதிக்காக்குமாறு கூறவேண்டும் என கேட்டுக்கொண்டேன். இருந்தாலும் அவர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என கூறினார். அதுமட்டுமின்றி பிரதமர் மக்களை கைத்தட்டி உற்சாகப்படுத்துமாறு கொரோனா சமயத்தில் தெரிவித்தார். ஆனால் அமைதிகாக்கும் படியும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் கூறவில்லை.

பிரதமர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தை பயனற்ற திட்டம் என வர்ணித்து இருக்கிறார். மக்கள் கூட்டம் கூட்டமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநிலம்விட்டு மாநிலம் பயணித்தபோது, அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் பிழைக்க, நாங்கள்(காங்கிரஸ்) கொண்டு வந்த இத்திட்டம் தான் உதவிகரமாக இருந்தது என்பதை நினவில்கொள்ள வேண்டும். அக்னிபாத் திட்டம் ஒரு வேடிக்கையான விஷயம் ஆகும். ஏனென்றால் 24 வயதில் அக்னி வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு மேற்கொண்டு என்னசெய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ராஜஸ்தானில் அமைதி மற்றும் வன் முறை தடுப்புத்துறை ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கென மாநில அரசின் சார்பாக தனி அமைச்சகம் (அல்லது) துறை உருவாக்கப்படும் என கூறினார்.

Categories

Tech |