Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 10, 402 அரசு பணியிடங்கள்….. விரைவில் நிரப்பப்படும்….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 10, 402 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2021 – 22ம்  ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது அரசு துறைகளில் காணப்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 402 கண்டறியப்பட்ட குறைவு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்” என்ற அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களை முகமைகள் மூலம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |