Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு 6 மாதத்திற்கு வாடகை இல்லை, 1 வருஷத்துக்கு முழு பாதுகாப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெறுவோருக்கு 6 மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு வருடத்திற்கு 24×7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் அடிப்படையில் நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு 1959ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. மத்திய அரசு செய்த திருத்தங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறும் நாளில் இருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் தொடர்பான அறிவிக்கையில், ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் (அல்லது) அந்தந்த உயர்நீதிமன்றங்கள் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை ஓராண்டு காலத்துக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஆகஸ்ட் 26ம் தேதி ஓய்வுபெற இருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு வாடகை இன்றி வீடு மற்றும் பாதுகாப்பு வசதியும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் இவ்விரு வசதிகள் வழங்கப்படும். முன்பே அயோத்தியா வழக்கில் தீர்ப்பளித்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடந்த 2019ம் வருடம் நவம்பர் மாதம் முதல் முழுநேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |