Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கெல்லாம் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி  தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து சேவை துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம். அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்கள் அலுவலகங்களில் சமர்ப்பிக்கவேண்டும். சேவை துறையினருக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |