Categories
உலக செய்திகள்

“இவர்களை எப்படி சமாளிக்க போகிறோம்”…. கண் கலங்கிய சார்லஸ்-கமிலா தம்பதி…. வெளியான தகவல்….!!!!

திருமண நாளன்று சார்லஸ்- கமிலா தம்பதி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய  ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர்  கமிலா  என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்தன்று  கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புத்தக ஆசிரியரான angela Levin என்ற பெண்மணி  தகவலை வெளியிட்டுள்ளார். அதில் காமிலாவை  மிக சாதாரணமாக அருவருப்பான பெண் என்றே பல ராஜகுடும்பத்தின் ஆதாரங்கள் கூறிவந்தது. ஆனால் இளவரசர் சார்லசும் இளவரசி டயானாவும் விவாகரத்து செய்ததற்கு கமிலாவே காரணம் எனவும் பலர் வெளிப்படையாக பேசினார்கள்.

இதுபோன்ற சூழலை இதுவரை எந்த பெண்ணும் கடந்து சென்றிருக்க வாய்ப்பில்லை. மேலும் மகிழ்ச்சிக்கு குறை இல்லாத வீடு, நண்பர்கள் வட்டம், தேவைக்கு அதிகமான பணம் என வாழ்ந்தவர் இறுதியில் அருவருப்பான பெண் என்ற பட்டத்தை சுமந்தது  எவ்வளவு கொடுமை. மேலும் சார்லஸுடன்  கமலா வாழ்ந்து வந்தாலும் அப்போது அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிச்சயதார்த்தம் கூட முடிந்திருக்கவில்லை. இதனால் கமிலா  மீதான பழிச்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் போனது. மேலும் கமிலா பல்பொருள் அங்காடிக்கு சென்றால் கூட்டம் கூடிவிடும். அதிலும் சிலர் கமிலா  மீது பொருட்களை தூக்கி வீசும் நிலையும் இருந்தது. ஆனால் அந்த தருணங்களை அவர் புன்னகையுடன் எதிர்கொண்டார்.

இதற்கான தீர்வு அவருக்கு 2005-ஆம் ஆண்டு கிடைத்தது. என்னவென்றால் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் திருமணம் முடிந்து இருவரும் விண்ட்சர்  மாளிகையின் படிக்கட்டில் ஏறும்போது கண்ணீர் விட்டு கதறினர். எதற்கு தெரியுமா மக்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்று இருவரும் கவலை அடைந்தனர். மேலும் திருமணத்திற்கு அடுத்த நாள் கமிலா  அறையில் இருந்து வெளியே வரவே மிகவும் அஞ்சினார். ஆனால் தற்போது மக்களுக்கு மட்டும் இல்லாமல் ராணியாருக்கும் மிகவும் பிடித்தமான நபர்களில் ஒருவராக உள்ளார் என  அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |