4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராமன், பிரவீன் குமார், பாலாஜி என்ற நண்பர்கள் உள்ளனர். இந்நிலையில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனால் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அலிவருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.