வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற 36 கவுன்சிலர்களுக்கு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் முனீஸ்வரி, முத்துராமன், வெங்கடேஷ், ஆறுமுகம், ஆஷா, ராமச்சந்திரன், மதியழகன், பால்பாண்டி, பஷீர் அகமது, தனலட்சுமி, உமாராணி, குருவம்மாள், செல்வரத்தினம், பாத்திமுத்து, ஹேமா, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், மாலதி, விக்னேஷ்வரி, மிக்கேல் ராஜ், மஞ்சுளா, பண பாண்டி, ராமலட்சுமி ஆகியோர் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ஏ. ஆர். ஆர். சீனிவாசன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜசேகர், நகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன் உள்ளிட்ட பலர் பதவியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.