எய்ம்ஸ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களை அளிக்குமாறு உளவுப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லியில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மீது கடந்த மாதம் 23-ஆம் தேதி இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள சர்வர்கள் பழுதடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து சி.பி.ஐ., என்.ஐ.ஏ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தது.
அந்த விசாரணையில் சீனா மற்றும் ஹாங்காய் நாடுகளில் உள்ள சில இடங்களில் இருந்து இந்த தாக்குதல் நடத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள மின்னஞ்சல் முகவரிகளின் ஐ.பி விவரங்களை சர்வதேச போலீசிடம் இருந்து பெற்றுத்தருமாறு சி.பி.ஐ.க்கு உளவுப்பிரிவு கடிதம் எழுதி உள்ளது.