குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலாஜியை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த அஜித், ராமச்சந்திரன், பிரகாஷ்ராஜ், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார் . அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.