மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு பரிசு தொகை யை வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டு விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம்.எல்.ஏ கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, இளநிலை ஆய்வாளர் புகழேந்தி, ராகினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் சிறந்த முறையில் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டுவரும் விவசாயிகளை ஊக்கமளிக்கும் வகையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான மாநில திட்டம் மூலம் தெட்சிணாமூர்த்தி என்பவருக்கு முதல் பரிசாக 25 ஆயிரம், அழகிரி என்பவருக்கு 2-வது பரிசு 20 ஆயிரம் மற்றும் தர்மசிவம் என்பவருக்கு 3-வது பரிசாக 15,000 போன்ற பரிசு தொகைகளை வழங்கி பாராட்டியுள்ளார்.