சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் சார்பில் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம், என் பெருமை என்ற உறுதி மொழியை களப்பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் எடுத்தனர். அதன்படி இன்று வரை நகராட்சி முழுவதும் உள்ள தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் விளங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது நகர் மன்ற தலைவர் ஏ.சி மணி தலைமை நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், அலுவலக மேலாளர் நெடுமாறன், சுகாதார பிரிவினர், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகர் மன்ற தலைவர் ஏ.சி மணி சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டியுள்ளார்.