முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை செய்தியாளர்களிடையே சற்றுமுன் அறிவித்தார்.
இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவர் என்று அதிமுக தலைமை சார்பில் முன்னதாகவே கூறப்பட்டிருந்த நிலையில் பதிக்கையாளர்கள் சந்திப்பு இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கூட்டாக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.வழிகாட்டுதல் குழுவில் யார் யார் இடம்பெறுவர் என முன்னதாவே சிலரின் பெயர்கள் சலசலக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் செய்தியாளர்களை முதலில் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை அறிவித்தார்.வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ் பி வேலுமணி ,ஜெயக்குமார்,சி வி சண்முகம், காமராஜ், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் முதலானோர் இடம்பெற்றுள்ளனர்.வழிகாட்டுதல் குழுவினை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குழுவில் உள்ளோர்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.