Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்…. அறிக்கை வெளியிட்ட சரக டி.ஐ.ஜி…..!!!!!

சரகு டி.ஐ.ஜி ஆனி விஜயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஹேமாமாலினி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த லட்சுமி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அன்பரசி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு திருப்பத்தூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும், ரவிச்சந்திரன் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், தமிழ்ச்செல்வன் காட்பாடி காவல் நிலையத்திற்கும், ஜனார்த்தனன் திருப்பத்தூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என சரக டி.ஏ. ஜி. ஆனி விஜயா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |