Categories
மாநில செய்திகள்

“இவர்கள் ஆசிரியராக தகுதி இல்லை”…? 3 மாதத்தில் தமிழக அரசு மறு ஆய்வு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!!

தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு 3 மாதத்திற்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு இடைநிலை ஆசிரியர் நித்தியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்க கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆசிரியர் நித்தியா பி.எட் தமிழில் படித்து பின் பி.ஏ ஆங்கிலத்திலும், அதுவும் தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நீதிபதி இதனை ஏற்றுக் கொண்டு ஆசிரியை நித்தியா தமிழ் ஆசிரியை பிரிவில் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறியது மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள் தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து “தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல” என குறிப்பிட்டுள்ள நீதிபதி இட ஒதுக்கீட்டின் கீழ் நியமித்தாலும் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஏனென்றால் தற்போது தொலைதூர கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பது மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழக அரசு மூன்று மாதங்களில் தொலைதூர கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக  நியமிக்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |