Categories
மாநில செய்திகள்

“இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்போதுமே இப்படித்தான்”….. திமுக அரசை கடுமையாக விமர்சித்த இபிஸ்….!!!!

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அமைதி பூங்காவை திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இந்த நிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் இருந்தது. ஆனால் தற்போது இந்த விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக போதைப் பொருட்களில் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகிறது. குற்றவாளிகள் அச்சமின்றி சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி வரும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளி வருகிறது. இது போன்ற நிகழ்வுகளினால் மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்கின்றனர்.

அதிலும் பெண்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில் கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் போன்று வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது. எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல்துறை தற்போது செயலற்று உள்ளது. இது போன்ற வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாமல் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல், மாய உலகம் ஒன்றில் வாழும் ஒரு நிர்வாகத் திறற்று முதலமைச்சரை தமிழகம் பெற்றுள்ளது வேதனைக்குறியது. இதனையடுத்து எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அப்பொதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தின் தலைவிரித்து ஆடுகிறது. தனிமனிதரின் உயிருக்கு உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுகவினர் உருவாக்கி வருகின்றன. இது அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும். இனியாவது இந்த விடியா திமுக அரசு வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |