Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்கள் இருவரும் பிக்பாஸிலா…? புகைப்படத்தால் வெளிவந்த தகவல்….!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் நுழைய போகும் போட்டியாளரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைகாட்சி மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி கடந்த 2-வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் . 4-வது சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் 4-வது சீசன் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் கடந்த மாதம் வெளியானது. ஆனால் இதுவரை நிகழ்ச்சில் பங்கேற்பவர்கள் பற்றிய விவரமும் ஒளிபரப்பு நாள் பற்றியும் தொடர்ந்து சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் போட்டியாளர்கள் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுபட்டுள்ளனர். 14 நாட்கள் முடிவடைந்த பிறகு பிக்பாஸ் வீட்டிற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரியோ மற்றும் நடிகை சிவானி ஓட்டல் ஒன்றில் இருப்பது போன்ற புகைப்படத்தை தாங்கள் சமூக வலைத்தளம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ மற்றும் சிவானி பங்கேற்க இருப்பது   கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதோடு ஆஜித் , வேல்முருகன் , ஜித்தன் ரமேஷ்அனுமோகன்  ,கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது .

Categories

Tech |