ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் கல்வியாண்டில் PhD படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக இந்த மாதம் 10 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜூலை 8ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அடுத்த மாதம் எட்டாம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.