Categories
மாநில செய்திகள்

“இவர்கள் என்னை கொடுமைபடுத்துறாங்க”…. 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு….!!!!!

சென்னை அம்பத்தூரை அடுத்த குமரன்நகர், மகாத்மா காந்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சேகர்(46). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவரின் மூத்த மகன் பார்த்தசாரதி (18) ஆவார். இவர் தனியார் கல்லூரியில் முதலாண்டு பயின்று வருகிறார். இளைய மகன் பாரதி செல்வா (14) இதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை சேகர் தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பாரதிராஜா, பாரதி செல்வா ஆகிய இருவரும் வீட்டு கதவை பூட்டிவிட்டு கல்லூரி, பள்ளிக்கு சென்று விட்டனர். அதன்பின் மாலை கல்லூரிபடிப்பு முடித்து வீட்டிற்கு பாரதிராஜா வந்தபோது, அங்கு பாரதிசெல்வா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அண்ணன் பாரதிராஜா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முன் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அவற்றில், பள்ளி ஆசிரியர்கள் அடித்து கொடுமைபடுத்துவதாகவும், இதனால் தான் மன உளைச்சலில் சாகபோகிறேன். எனக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தன் சாவுக்கு பெற்றோர் காரணம் அல்ல. ஆகவே முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம். பள்ளி அராஜகம் செய்கிறது. சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். அத்துடன் நகரில் தன்னை எங்கே புதைக்க வேண்டும் (அல்லது) எரிக்க வேண்டுமென உருக்கமாக பதிவேற்றி இருக்கிறார். அதுமட்டுமின்றி மற்றொரு வீடியோவில் தூக்கு மாட்டிக்கொள்வது பதிவாகி இருக்கிறது. முன்பாக தந்தை கண்டித்ததால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார் என புகார் அளிக்கப்பட நிலையில், தற்போது என் தற்கொலைக்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்று வீடியோ பதிவுசெய்து வைத்துவிட்டு இறந்துள்ளார்.

Categories

Tech |