பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழவண்ணார்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வங்கியில் பணிபுரியும் நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி இளையராஜா தனது தம்பி பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து நித்யா பணிபுரியும் வங்கிக்கு சென்று நிலம் வாங்குவதற்கு கடன் தருமாறு கூறி தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் இளையராஜா, தம்பி பாலமுருகன், தந்தை மதியழகன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து வீட்டில் இருந்த நகைகளை திருடி கொண்டதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நித்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.