தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்கள் ஜாமர் கருவிகளை பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகள் மட்டுமே அரசால் அனுமதிக்கப்பட்ட ஜாமர் கருவிகளை வாங்கி பயன்படுத்த முடியும்.
அரசால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர பிற நிகழ்ச்சிகளில் அக்கருவிகளை பயன்படுத்துவது சட்டவிரோதமானது. டெலிகாம் நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனங்கள் ஜாமர் கருவிகளை வாங்கவோ விற்கவும் பயன்படுத்தவும் கூடாது என தெரிவித்துள்ளது.