தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் சியால்கோட்டில் பொதுக்கூட்டத்தில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். இந்த உரையாடலின் போது அவர் கூறியதாவது, ” என்னை கொல்லும் சதித்திட்டம் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் திட்டமிடப்பட்டும் வருகிறது.
அவர்களின் பெயர்களை ஒரே வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அப்பொழுது அந்த வீடியோ மக்களின் முன்பு வெளியிடப்படும்” என இம்ரான் கான் கூறியுள்ளார்.