மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா நடைபெறுகிறது. இதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் வருகின்ற 15-ஆம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.
அவர்களுக்கு பதிலாக வேறு யாராவது கொடியேற்றினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனையடுத்து தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் 9444178000 என்ற எனது செல்போன் எண்ணிற்கோ அல்லது 7402607518 என்று எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.