தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களின் தகவல்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கட்டுப்பாடு பகுதிகளில் இருப்பவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று பணியிலிருந்து தனது சொந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் 12d என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.