இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
உலக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளையும், அவர்களின் நிலைமையையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐநா சபை, உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் தினத்தை அனுசரித்தது.
நம்மோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வோம். அவர்களுக்கு நாம் கரம் கொடுப்போம், ஆதரவாக இருப்போம். இன்றைய நிலையில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இவர்கள் மாற்றுத்திறனாளி அல்ல, பலரை மாற்றும் திறனாளிகள்.