பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சமம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள குறுக்கலியாம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் திருட்டுத்தனமாக தண்ணீரை திருடுகின்றனர். இதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அன்னூர்-ஊட்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தண்ணீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.