தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது.
அந்தவகையில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளையும் திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பத்திரிக்கையாளர்கள் மீது 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 90 வழக்குகளையும் முதல்வர் திரும்ப பெற உத்தரவிட்டுள்ளார்.