Categories
விளையாட்டு

இவர்கள் 2 பேரும் சாம்பியன் பந்து வீச்சாளர்கள்…. புகழ்ந்து தள்ளிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன்….!!!!

6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இவற்றில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர்கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதியது. கனமழை காரணமாக ஆட்டம் துவங்குவதற்கு 2 மணிநேரம் தாமதமானது. இதன் காரணமாக போட்டியானது 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலாவதாக ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து குவித்தது. சாய்சுதர்ஷன் 42 பந்தில் 65 ரன்னும் ( 8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷாருக்கான் 17 பந்தில் 22 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அதன்பின் சந்தீப் வாரியர், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 17 ஓவர்களில் 139 ரன் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் சேப்பாக் சூப்பர்கில்லீஸ் அணியானது ஆடியது.

4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்து இருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் மழை நீடித்த காரணத்தால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. 5 ஓவர் நடந்திருந்தால் டக்வொர்த்-லீவிஸ் விதி முறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டிருக்கும். அதற்கு வசதியில்லாததால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் கூட்டாக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். இதில் சேப்பாக் சூப்பர்கில்லீஸ் அணியானது ஹாட்ரிக் சாதனையுடன் 4வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

இதற்கு முன்பாக 2017, 2019, 2021 போன்ற வருடங்களில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. இந்நிலையில் சேப்பாக் சூப்பர்கில்லீஸ் அணியின் கேப்டனான கவுசிக்காந்தி கூறியிருப்பதாவது “உண்மையில் யாரும் எதிர்பார்க்காத முடிவு. எனினும் கண்டிப்பாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. சந்தீப்வாரியர், சாய் கிஷோர் போன்றோர் எங்கள் அணியின் சாம்பியன் பந்து வீச்சாளர்கள் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளனர்” என்று அவர் கூறினார். அதன்பின் கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக்கான் கூறியதாவது, “முதன்முறையாக பட்டத்தை இணைந்து பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தாலும் இம்முடிவு சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு ஓவர் வீசி இருந்தால் போட்டியின் முடிவு எங்கள் பக்கம் வந்திருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு எங்கள் அணியின் ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது” என்று கூறினார்.

Categories

Tech |