வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் (WSJ) 3 அமெரிக்க பத்திரிகையாளர்களை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற சீனாஅரசு உத்தரவிட்டுள்ளது.
“சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்” (“China is the Real Sick Man of Asia,) என்ற தலைப்பில் பார்ட் கல்லூரி பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russel Mead ) எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“China is the Real Sick Man of Asia, என்று தலைப்பை வெளியிட்டதிற்கு மன்னிப்பு கேட்க ஜர்னல் மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘நிறவெறி’ தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் உள்ளது என குற்றஞ்சாட்டியது.
இதைதொடர்ந்து 3 ஊடகவியலாளர்களின் அனுமதி அட்டை இனி செல்லாது என்று அறிவித்துள்ளது. அதோடு அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதில் மூவரில், ஜோஷ் சின், சாவோ டெங் ஆகிய இரண்டு பத்திரிகையாளர் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள், மற்ற ஒருவரான பிலிப் வென் என்பவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர்கள் 3 பேரும் 5 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.