விவசாயி உயிரிழந்ததை அடுத்து தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் மணிகண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனது வீட்டின் அருகில் சிவகுமார் என்பவர் நடத்தும் கிளினிக்கிற்கு சென்று ஊசி போட்டுள்ளார்.இதனையடுத்தது மணிகண்டனின் உடல்நிலை மோசமானதால் உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அதன்பின் மணிகண்டனின் குடும்பத்தினர்கள் சிவகுமார் தவறான சிகிச்சை அளித்ததால் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு சிவகுமார் மருத்துவருக்கு படிக்கவில்லை என்பதும், டிப்ளமோ தான் படித்ததுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலி மருத்துவரான சிவக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமாரிடமிருந்து ஊசிகள்,மருந்துகள் போன்றவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.