ரஷியா விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா மரண வியாபாரி விக்டர் பவுட்டை விடுதலை செய்துள்ளது
உக்ரைன் மீது ரஷியா 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.இதனால் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர்ஸ் ரஷியா சென்றார். அப்போது அவரை போதை பொருள் வைத்திருப்பதாக கூறி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்கம் செய்வதற்காக வீராங்கனையை ரஷியா பினை கைதியாக பயன்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ரஷிய அதிகாரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஆயுத வியாபார குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷியாவை சேர்ந்த விக்டர் பவுட்ரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் போரை விரும்பும் மூர்க்கத்தனமான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் மரண வியாபாரி என்று அழைக்கப்படும் விக்டர் பவுட்டை விடுவிக்க அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில் பிரிட்னி கிரைனர்ஸ், விக்டர் பவுட் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டர். பின்னர் இருவரும் விமான மூலம் அபுதாபி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தங்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.