கொரோனா தொற்றினால் உயிரிழந்த 28 குடல் மருத்துவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் அந்த காலகட்டத்தில் தங்களது குடும்பங்களை கருத்தில் கொள்ளாமல் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் என பல துறைகளை சேர்ந்தவர்கள் பணி புரிந்தனர். அதிலும் சிலர் பணியும்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்தது.
இந்நிலையில் சம்மான் ராஷி என்ற திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 31 வீரர்களின் குடும்பத்திற்கு 1 ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனையடுத்து 28 குடல் மருத்துவர்களின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் கேஜரிவால் துப்புரவு பணியாளர் ஒருவரை அவரது குடும்பத்துடன் தில்லிக்கு வரவழைத்து விருந்து அளித்துள்ளார். இதனை அறிந்த எதிர்க்கட்சியினர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்காத முதல்வர் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் துப்புரவு பணியாளருடைய குடும்பத்திற்கு விருந்தளித்துள்ளார் என கூறி வருகின்றனர்.