Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர் இல்லாதது பெரும் இழப்பு…. “ஆனால் அவர் பார்முக்கு வந்தது ப்ளஸ்”…. ஜெயவர்த்தனே கருத்து..!!

இவர் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்..

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களே பெரும்பாலானோர் இடம்பெற்றுள்ளனர்.. பெரும் மாற்றங்கள் இருக்கும்  எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சில வீரர்கள் நீக்கப்பட்டதற்கு அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆசியக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அந்தந்த காயங்களில் இருந்து மீண்டு வந்துள்ளது அணிக்கு பலம் சேர்க்கிறது.. ஆனால் ​​டைனமிக் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.. ஜடேஜா இலலாதது அணிக்கு இழப்பு என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே, ஜடேஜா இல்லாதது மென் இன் ப்ளூவுக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெயவர்த்தனே தி ஐசிசி ரிவியூவில் கூறியதாவது “இது ஒரு சவால். அந்த நம்பர் 5 ரோலில் அவரை நன்றாகப் பொருத்தியிருந்தார். அவர் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார், அவரும் ஹர்திக்கும் அந்த முதல் சிக்ஸரில் இருப்பது பேட்டிங் வரிசையில் இந்தியாவுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொடுத்தது.

ஆனால் இது அவர்களுக்கு கடினமான ஒன்றாகும், மேலும் அந்த இடது கை வீரர் இல்லை என்பது ஒரு கவலையாக இருக்கலாம். அவர்கள் டிகேயை (தினேஷ் கார்த்திக்) விட்டுவிட்டு, ரிஷப் பண்டை அந்த பாத்திரத்தில் கொண்டு வந்து, 5 அல்லது 4 ரன்களில் பேட்டிங் செய்ய வைப்பார்கள். இதுதான் உலகக் கோப்பைக்கு அவர்கள் (இந்தியா) தீர்வு காண வேண்டிய விஷயங்கள். ஆனால் ஃபார்மில் இருந்த ரவீந்திர ஜடேஜா இல்லாதது அவர்களுக்கு பெரிய இழப்பாக இருக்கும்,” என்று கூறினார்.

மேலும் அவர் சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு ஒரு முக்கிய சாதகமாக இருப்பது முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது ஃபார்மில் திரும்பியது என்று கூறியது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |