Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இவர் இல்லாம மாநிலமே இல்ல”…. முதல் மந்திரியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி…. அது யார் தெரியுமா?….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஷாஜகான்பூரில் நடந்த விழாவில் 549 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ்வேக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது, மீரட், கபூர், அம்ரோஹா, சம்பல், பதவான் ஷானகான்பூர் ஹர்தோய், உன்னாவ், வந்தவாசி போலீசார் ரேபரேலி, பிரதாப்கார்க் மற்றும் பிரயாக்ராஜ் மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

600 கிலோ மீட்டர் தூரம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு சுமார் 36,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ்வே காரணமாக இந்த பிராந்தியத்தில் புதிய தொழிற்சாலைகள் வரும் எனவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கான ஏராளமான வேலைவாய்ப்புகள், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும் எனவும் அவர் கூரியுள்ளார். மேலும் அடுத்த தலைமுறை உட்கட்டமைப்பு வசதிகளுடன் நவீன தொழில்முறை மாநிலமாக உத்திரபிரதேசம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மேலும் இங்கு அமைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே விமான நிலையங்கள், ரயில் பாதைகள் மூலம் ஏராளமான மக்களின் நல்லாசி கிடைத்துள்ளது. மேலும் பேசுகையில், முன்னதாக பொதுமக்களின் பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.ஆனால் இன்று உங்களது பணம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவுகிறது. முந்தைய காலங்களில் பெரிய திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் முந்தைய ஆட்சியாளர்களின் கஜானா நிரம்பியது.

ஆனால் இன்று அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் மக்களின் பணம் உங்களின் கைகளிலேயே உள்ளது. முந்தைய காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இன்று மாபியாக்கள், சொத்துக்கள் இடித்து தள்ளப்படுகின்றன. ஏழைகளின் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவர்களின் நலனே எங்களின் இலக்கு என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Categories

Tech |