Categories
உலக செய்திகள்

இவர் இவ்வளவு நாள் எங்க இருந்தார்?…. பொது நிகழ்ச்சிக்கு வந்த சீன அதிபர்…. வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி….!!!!

பல நாட்களுக்குப் பிறகு சீன அதிபர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

சீன நாட்டில் அதிபராக ஜி ஜின்பிங்  உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் இது குறித்து எந்த ஒரு தகவலும் சரியாக தெரியவில்லை. இந்நிலையில்  அங்கு ஆட்சி கவிழ்ப்பு  முயற்சி நடப்பதாக சர்வதேச ஊடகங்களில் பரபரப்பான செய்தி வெளியானது. இப்படி செய்தி வந்தும் கூட அதிபர் ஜிஜிபிங்  பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதிக்கு பிறகு நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ஜிஜிபிங்  கலந்து கொண்டார். பின்னர் அவர் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |