வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எகிப்து நாட்டில் அடுத்த மாதம் COP27 என்னும் அனைத்து உலக பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகைஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த மாதம் அதிபர் ஜோ பைடன் எகிப்து செல்ல இருக்கிறார். மேலும் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் காம்போடியா, இந்தோனேசியா நாடுகளுக்கு செல்வார்.
இந்நிலையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதோடு எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான மீள்திறனை வளர்த்துக் கொள்ள அதிபர் ஜோ பைடன் உதவுவார் என அந்த அறிக்கைகள் கூறப்பட்டுள்ளது.