கட்டிட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது.
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிரதீப் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும், பத்து வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று கொலையான பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இதுகுறித்து மனைவியிடமும் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் பிரதீப்பின் வாயில் ரத்த கரையும், உடலில் ரத்தக் காயங்களும் இருந்தன. இதனால் சந்தேகத்தின் பெயரில் ரோகிணியை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பிரதீப்க்கும் , ரோகினிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குடிபோதைக்கு அடிமையான பிரதீப் அடிக்கடி மது போதையில் ரோகிணி உடன் தகராறு செய்து வந்துள்ளார். பிரதீப்பின் நண்பர் சீனிவாசன்.
இவர் பிரதீப்பின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை அறிந்த பிரதீப் ரோகிணியும் நண்பன் சீனிவாசனையும் கண்டித்துள்ளார். இவர் உயிரோடு இருந்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று எண்ணி ரோகினியும் ஸ்ரீனிவாசனும் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி 23ஆம் தேதி இரவு பிரதீப் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ஸ்ரீனிவாசனும் வந்துள்ளார். இதனையடுத்து ரோகிணி தனது பிள்ளைகளை பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க அனுப்பி வைத்துள்ளனர். ஸ்ரீனிவாசன் பிரதீப் உடன் உன்னுடன் சேர்ந்து வாழ உன் மனைவிக்கு விருப்பம் இல்லை. எனவே அவருக்கு விவாகரத்து வழங்கி விடு என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரதீப் ஸ்ரீனிவாசன் தகராறு செய்துள்ளார். பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாசன், ரோகிணியும் பிரதீப்பை வாயில் துணியை திணித்து சுடிதார் துப்பட்டாவால் பிரதீப் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை படுக்கை அறையில் வைத்து போர்வையை போர்த்தி தூங்குவதுபோல் காட்டியுள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைகள் டிவி பார்த்துவிட்டு வீடு வரவே அப்பா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு ரோகிணி அப்பா தூங்குவதாக குழந்தையிடம் கூறியுள்ளார். பின்னர் ஸ்ரீனிவாசனும், ரோகிணியும் ஒரே படுக்கையில் தூங்கி உள்ளனர். மறுநாள் காலை ஸ்ரீநிவாசன் வெளியே புறப்பட்டுள்ளார். அதன் பிறகு கணவர் குடிபோதையில் இறந்து விட்டதாக கூறி நாடகமாடி உள்ளார். இது போலீஸாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக கைதான 2 பேரிடமும் சக்கராயப்பட்டன போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.