காங்கிரஸை சேர்ந்த மாநில மந்திரி ஹசன் அவர் மீது பாஜக தலைவர் கிரித் சோமையா அவர்கள் புகார் ஒன்றை கூறியிருந்தார். இதனால் அவரை சோலாப்பூர் மாவட்டத்தில் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது, “பா.ஜனதாவின் மிரட்டல்களுக்கு காங்கிரஸ் மந்திரிகள் எவரும் அஞ்ச தேவையில்லை. ஏனெனில் நாங்கள் அனைவரும் எந்த தவறும் செய்யவில்லை. மேலும் நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ எவ்வாறு தவறாக வழி நடத்தப்படுகிறது என்பது தெரியும்.
கிரித் சோமையாவின் கருத்துக்களை அவரது கட்சியினரே ஒரு பொருட்டாக எண்ணவில்லை. தற்பொழுது முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்த ஊழலை குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. மேலும் மராட்டியத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற விரும்பினால் அவர்களது கட்சித் தலைவர்களின் தவறான செயல்களை குறித்து தெரியப்படுத்தினால் மட்டுமே அவர்களால் மக்களின் ஆதரவை பெற இயலும்” என்று கூறினார்.