மோசடி செய்த 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான முத்துக்குமார் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2000-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நான் 2.2 சென்ட் நிலத்தை வாங்கினேன். இதனை சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து என்னுடன் நிலம் வாங்கிய 8 பேருடன் சேர்ந்து பத்திரம் பதிவு செய்தேன். இந்த நிலத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் போலியான ஆவணங்கள் தயாரித்து அவரது பெயரில் பத்திர பதிவு செய்துள்ளார். எனவே மோசடியில் ஈடுபட்ட துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலத்தை மீட்டு தருமாறும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான துரைசாமி கடந்த 2000-ஆம் ஆண்டு சிவகிரியில் சென்ட் நிலத்தை வாங்கி பதிவு செய்துள்ளார். அப்போது முத்துக்குமார் உள்ளிட்ட 8 பேர் வாங்கிய 12 ஏக்கர் நிலத்தை தனது தாத்தாவுக்கு சொந்தமானது போல வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், நீதிமன்ற அனுமதி கடிதம் போன்ற போலியான ஆவணங்களை தயாரித்து பத்திர பதிவு செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் மோசடி செய்த துரைசாமி உள்ளிட்ட 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.