பெண்ணை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 20 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததுள்ளார். அதில் நானும் மகிழஞ்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா வெளிநாட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் நாங்கள் செல்போன் மூலம் பேசி வந்தோம். தற்போது சூர்யா வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனால் நான் அவர்களது வீட்டிற்கு சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சூர்யாவிடம் கேட்டேன். அதற்கு சூர்யா தனது பெற்றோருடன் சேர்ந்து என்னை மிரட்டினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சூர்யாவின் தந்தை குமார், தாய் கீர்த்திகா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சூர்யாவை வலை வீசி தேடி வருகின்றனர்