ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர் என தோனியை புகழ்ந்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமாற பாராட்டியுள்ளார் சென்னை வீரரான ஷேன் வாட்சன். “கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர். அடுத்து வரும் நாட்களில் அவர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்.
அவர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சியை காணும் பொழுது அவருக்கு வயது ஆகவில்லை என்று தான் தோன்றுகிறது. 40 வயதானாலும் அவரால் விளையாட முடியும். டோனியின் மிகப்பெரிய ரசிகன் நான். சிஎஸ்கே அணிக்காக அல்லது சர்வதேச அளவிலே அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்கவே நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் சென்னை அணிக்காக 2018 ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.