வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவர் ஆண் பக்தர்களிடம் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவருக்கு ஆண்களை மட்டும் தான் பிடிக்கும். அந்த சாமியார் ஆண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் நெருக்கமாக இருந்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. வேலூர் முழுவதிலும் இரண்டு நாட்களாக சாமியார் பற்றி தான் ஒரே பேச்சு. அந்த சாமியாரை நிஜப்பெயர் சாந்தகுமார். அதன்பிறகு சாமியாராக மாறி சாந்தா ஸ்வாமிகள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் பகுதியில் ஸ்ரீ ஸர்வமங்கள பீடம் ஒன்றை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம் வந்துள்ளார்.
அவர் தன்னிடம் வருகின்ற வசதியான பக்தர்களிடம், பிசினஸ் சம்பந்தமாக பேசியுள்ளார். அதன்பிறகு பெங்களூரில் தன்னுடைய நண்பர் கமலக்கார ரெட்டி என்பவர் இருப்பதாக கூறி அந்த பக்தர்களிடம் பணத்தை பெற்றுள்ளார். அது மட்டுமன்றி தாங்கள் கொடுக்கும் பணம் இரட்டிப்பாக மாற்றித் தரப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறி பணத்தைப் பெற்று உள்ளார். இவ்வாறு நான்கு பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார்.
அதன் பிறகு அவர்கள் அளித்த புகாரின் பேரில் சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு விசாரணை செய்ததில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சாமியாருக்கு ஆண் பக்தர்கள் மீது ஒரு ஆசை உள்ளதால், அவர்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். அதுமட்டுமன்றி பேஸ்புக் மற்றும் மெசேஜ் மூலமாக பக்தர்களிடம் ஆபாசமாக பேசி பாலியலுக்கு அழைத்து உள்ளார். அதனுடன் சேர்த்து தனது ஆபாச போட்டோ ஒன்றை அவர்களுக்கு ஷேர் செய்துள்ளார்.
அப்படி யாராவது விருப்பம் கொண்டாள், அவர்களை தன்னுடைய இடத்துக்கு வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இவ்வாறு பல்வேறு குற்றச் செயல்களை செய்த சாமியாருடன் தொடர்பில் இருந்த கம கமலக்கராரெட்டி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த சாமியாரிடம் பணத்தை தந்து ஏமாந்த பக்தர்கள், திரும்ப பணம் கேட்டால், ‘சூனியம் வைத்து விடுவேன், கை கால்களை செயலிழக்க செய்து விடுவேன்’ என்று சாமியார் மிரட்டியுள்ளார். தற்போது சாமியார் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாமியார் இதுவரை எத்தனை பேரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் என்று தெரியவில்லை. அதனால் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.