கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்றுள்ளார். இந்நிலையில் பா.ஜ.க முஸ்லிம்களுக்கு எதிரானது என அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களிடம் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது “ஹலால் இறைச்சியால் தங்களுக்கு ஆபத்து, முஸ்லீம்களின் தாடியால் ஆபத்து, தொப்பியால் ஆபத்து, முஸ்லீம்களின் உணவு பழக்கவழக்கங்களால் தங்களுக்கு ஆபத்து என அவர்கள்(பாஜக) கருதுகின்றனர்.
பா.ஜ.க முஸ்லிம் அடையாளத்திற்கு எதிரானது ஆகும். அனைவருக்கும் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரது நம்பிக்கை என்று பிரதமர் சொல்லும் வார்த்தைகள் வெற்றுப்பேச்சு. இந்தியாவினுடைய பன்முகத் தன்மையையும், முஸ்லீம் அடையாளத்தையும் ஒழிப்பதே பா.ஜ.க-வின் உண்மையான செயல்திட்டம் ஆகும். இதனிடையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் நாட்டின் பிரதமராக வருவார் என்று அவர் கூறினார்.